"தங்கம் மட்டுதான் டார்கெட்".. ஒரே மாதிரி கைவரிசை- பூட்டிய வீட்டில் காலியாகும் பீரோ

x

சங்கராபுரம் அருகே, ஒரே நாளில் இரண்டு கிராமங்களில் 30 சவரன் நகைகளை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். எஸ்.வி. பாளையத்தைச் சேர்ந்த அரசு மருத்துவர் ஹரி, வெளியூர் சென்றிருந்தார். அவரது வீட்டின் முன்பக்க பூட்டை உடைத்த மர்ம நபர்கள், 20 சவரன் நகைகள், 1.35 லட்சம் பணம் மற்றும் வெள்ளிப் பொருட்களை கொள்ளையடித்துச் சென்றனர். இதேபோன்று, கடுவனூர் கிராமத்தைச் சேர்ந்த சேகர் - செல்வி தம்பதி வெளியூர் சென்றிருந்த நிலையில், வீட்டின் முன்பக்க பூட்டை உடைத்து, 10 சவரன் நகைகள், 10 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை எடுத்துச் சென்றனர். புகார்கள் பேரில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்