தேன் எடுக்க போய் கெடச்ச தங்க காசு கடனை அடைச்சு கார் வாங்கி சொகுசு வாழ்க்கை | Crime | India

x

நெல்லூர் மாவட்டம் சித்தேபள்ளி கிராமத்தை சேர்ந்த சகோதரர்களான அஜித், அமரன், வெங்கடேஷ்வரன் மற்றும் அதே பகுதியை சேர்ந்த வருண், சுப்பிரமணியம் ஆகிய 5 பேர், வனப்பகுதியை ஒட்டிய மலை குன்றின் மீது தேன் எடுக்கச் சென்றனர். அப்போது, ஒரு பெரிய பாறைக்கு அடியில் கிடைத்த பித்தளை சொம்பை உடைத்தபோது, அதில் மண் கலந்த தங்க காசுகள் இருந்தது. சகோதரர்களான அஜித், அமரன், வெங்கடேஷ்வரன் ஆகிய பேரும் தங்க நாணயங்களை எடுத்துக் கொண்டு சென்றதுடன், வெளியே சொல்லக்கூடாது என வருணையும், சுப்ரமணியத்தையும் மிரட்டி உள்ளனர்.

இதனிடையே, சகோதரர்கள் 3 பேரும், 770 கிராம் தங்கத்தை உருக்கி, சென்னையில் விற்று சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளனர். இதனை அறிந்து கோபமடைந்த வருண், நடந்ததைக் கூறி, செல்போனில் எடுத்த புகைப்படத்தை காட்டி நெல்லூர் மாவட்ட எஸ்.பி. மற்றும் ஆட்சியரிடம் புகார் அளித்தார். அதன் பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார், அஜித், அமரன், வெங்கடேஷ்வரன் ஆகிய 3 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் இருந்த 14 லட்சம் ரூபாய் பணம், 21 சவரன் தங்கம், பதுக்கி வைத்திருந்த 436 சிறிய தங்க நாணயங்கள், 63 பெரிய தங்க நாணயங்கள், ஒரு சொகுசு கார், ஆட்டோ ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் தங்க காசுகள் கிடைத்த இடத்தில் போலீசார் ஆய்வு செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்