"முதலில் சிறைக்கு போவது... ஓபிஎஸ்-ஆ..? ஈபிஎஸ்-ஆ..?" - ஓபனாக உடைத்த உதயநிதி

x

எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவருக்கும் சிறைக்கு யார் முதலில் செல்வது என போட்டி நடப்பதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

vovt

சென்னை ராயப்பேட்டையில், சென்னை மேற்கு மாவட்ட திமுகவினருக்கு பொங்கல் பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. இதில் விளையாட்டுத்துறை அமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று, பொங்கல் பரிசினை வழங்கினார். பின்பு நிகழ்ச்சியில் பேசிய அவர், மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக மத்திய அரசு ஒரு ரூபாய் கூட வழங்கவில்லை என்றும், தமிழக அரசு நிவாரணம், பொங்கல் பரிசு உட்பட ஒரே மாதத்தில் எட்டாயிரம் ரூபாய் அளித்துள்ளதாக தெரிவித்தார். மேலும் ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவருக்கும் சிறைக்குள் யார் முதலில் செல்வது என போட்டி நடப்பதாகவும், இருவரும் சிறைக்கு சென்றால் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை என்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்தார்.


Next Story

மேலும் செய்திகள்