மாட்டு வண்டியில் வந்த சீர்வரிசைகள்.. ஒரு நொடி அசந்து போன உடன்பிறப்பு.. | Gobichettipalayam | Erode
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் புதுக்கரைபுதூர் பகுதியில், பூப்புனித நன்னீராட்டு விழாவை முன்னிட்டு மாட்டு வண்டியில் தாய் மாமன் சீர்வரிசை எடுத்து சென்றது பலரின் கவனத்தை ஈர்த்தது. தாய் மாமன்களான பூஞ்சோலை ரஞ்சித், செல்வம், பரமேஸ்வரன் ஆகியோர் மாட்டு வண்டியில் தனது சகோதரி மகளுக்காக, சுமார் 3 கிலோ மிட்டர் தூரம் வரை சீர்வரிசை பொருட்களுடன் ஊர்வலம் வந்து, பொதுமக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளனர். மேலும் விழாவுக்கு வந்த உறவினர்கள் மற்றும் நண்பர்களை மாட்டு வண்டியிலேயே அழைத்து சென்று, சுற்றுச்சூழல் மாசுபாடு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர்.
Next Story