களைகட்டிய ஆட்டுச் சந்தைகள்...ரூ. 7 கோடிக்கு மேல் சென்ற வியாபாரம்
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ஆடு சந்தையில் விற்பனை களைகட்டியது...விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஆட்டு சந்தையில் கிட்டத்தட்ட 15 ஆயிரம் ஆடுகள் விற்கப்பட்ட நிலையில் 7 கோடி ரூபாய்க்கு மேல் வியாபாரம் நடைபெற்றதாக வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.நெல்லை மாவட்டம் வள்ளியூர் சந்தையில் 2ஆயிரம் ரூபாய் முதல் 45 ஆயிரம் ரூபாய் வரை ஆடுகள் விற்கப்பட்டன... 3 கோடி ரூபாய்க்கு மேல் வியாபாரம் நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.புதுக்கோட்டை சந்தைப்பேட்டையில் உள்ள ஆடுகள் விற்பனை சந்தையில்4 கோடி ரூபாய் அளவிற்கு ஆடுகள் விற்பனையானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியில் ஆட்டுச் சந்தை களை கட்டியது. மொத்தம் 2 கோடி ரூபாய்க்கு ஆடு வியாபாரம் நடைபெற்றதால் வியபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Next Story