"யார் எப்படி வேணாலும் போங்க.. நான் சரி பண்றேன்" ரியல் சிங்கப்பெண்
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே சாலையில் இருந்த பள்ளத்தை சிமெண்ட் கலவை கொட்டி சீரமைத்த மூதாட்டியின் செயல் பாராட்டை பெற்றுள்ளது. அந்த வழியில் சென்ற அதிகாரிகள் கவனம் செலுத்தாத நிலையில், அங்கு வேர்க்கடலை விற்ற மூதாட்டி, தன் முனைப்போடும் அக்கறையோடும் பள்ளத்தை சீர் செய்துள்ளார். இது தொடர்பான வீடியே தற்போது சமூக வலைதளங்களில் வெளியானநிலையில், மூதாட்டியின் சமூக அக்கறைக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
Next Story