"மகளிர் உரிமைத்தொகை கொடுங்க.." "இல்ல அரசு வேலை கொடுங்க" - மாவட்ட ஆட்சியரிடம் பெண் மனு

x

மகளிர் உரிமைத்தொகை கொடுங்க, அப்படி இல்லன்னா, நீங்கள் குறுஞ்செய்தி அனுப்பியது போன்று அரசு வேலை கொடுங்க என்று, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் பெண்மணி ஒருவர் மனு அளித்தார். பல்லவராயன் பத்தையைச் சேர்ந்த சித்ரா, மகளிர் உரிமை தொகை பெற விண்ணப்பித்திருந்தார். அவருக்கு, தலுக்கா அலுவலகத்தில் இருந்து கடிதம் வந்துள்ளது. அதில் அரசுவேலையில் இருப்பதால் உங்களுடைய விண்ணப்பம் நிராகரிக்கப்படுகிறது என்று குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த சித்ரா, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். இதை பார்த்த ஆட்சியர், அந்த பெண்ணிற்கு மகளிர் உதவித்தொகை வழங்க நடவடிக்கை மேற்கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்