"விமானத்தில் கொண்டு செல்லப்பட்ட சிறுமியின் உடல்"...மனமுடைந்து அழுத தாய்
நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே சிறுத்தை தாக்கி சிறுமி உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து நடந்த போராட்டPத்தில், சிறுமியின் தாய்க்கு பெண் காவலர் கண்ணீர் மல்க உணவு ஊட்டி விட்டார். சிறுமியை கொன்ற சிறுத்தையை பிடிக்க வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தில் சிறுமியின் தாய் மிலாந்தி தேவியும் கலந்து கொண்டார். அவர் உணவு, தண்ணீர் இல்லாமல் அழுது கொண்டே இருந்ததை கவனித்த பெண் காவலர் திலோர்மணி, தனக்கு வழங்கப்பட்ட மதிய உணவை, அவருக்கு கண்ணீர் மல்க ஊட்டிவிட்டார். அந்த காட்சி சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில், மனிதாபிமானத்துடன் செயல்பட்ட பெண் காவலருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
Next Story