நண்பருடன் பேசி கொண்டிருந்த சிறுமிக்கு...நடுகாட்டுக்குள் நடந்த உச்சகட்ட விபரீதம்...

x

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே 17 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

பல்லடத்தைச் சேர்ந்த அந்த சிறுமி, கொசவம்பாளையம் சாலையில் கடந்த 5-ஆம் தேதி தனது நண்பருடன் பேசிக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த 3 பேர், சிறுமியை மிரட்டி காவல் நிலையத்திற்கு அழைத்து செல்வதாகக் கூறி இருசக்கர வாகனத்தில் கடத்திச் சென்றுள்ளனர். பின்னர் காளிவேலம்பட்டி அருகே ஆள்நடமாட்டமில்லாத காட்டுப்பகுதியில் அந்த சிறுமியை அவர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிகிறது. சிறுமியை வீடியோ எடுத்து, நடந்த சம்பவத்தை வெளியே சொன்னால் புகைப்படத்தை வெளியிடுவதாக மிரட்டியுள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பி வந்த சிறுமி, நடந்த சம்பவத்தை தாயிடம் கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், பல்லடம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார், பல்லடம் அண்ணா நகரை சேர்ந்த ரமேஷ்குமார், ஜான்சன், ஊஞ்சபாளையத்தை சேர்ந்த பார்த்தீபன் ஆகியோரை பேக்சோ வழக்கின் கீழ் கைது செய்தனர். கைதான மூவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்