நரிக்குறவ மக்களுக்கு நல்ல செய்தி.. ஆட்சியரால் வாழ்வில் நிகழ்ந்த மாற்றம்.. | Gingee | Thanthitv
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த களையூரில் வசித்து வரும் நரிக்குறவர் மக்களுக்கு விழுப்புரம் மாவட்ட கூடுதல் ஆட்சியர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் உத்தரவின் பெயரில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கு பணி ஆணை வழங்கபட்டு,வீட்டு மனை பட்டாக்களும் வழங்கப்பட்டன. இந்நிலையில் கூடுதல் ஆட்சியர் ஸ்ருதன் ஜெய் நாராயணனிடம் பட்டா வழங்கியதற்கு நன்றி கூறி ,பட்டா வழங்கிய இடத்தினை அளவீடு பணி செய்வதற்காக நரிக்குறவர் மக்கள் மனு அளித்தனர். மேலும் மாவட்ட கூடுதல் ஆட்சியர் செயலை பாராட்டி நரிக்குறவர் மக்களுக்கு அவருடன் செல்ஃபியும் எடுத்துக்கொண்டனர்.
Next Story