`பேயாக' மாறிய கணவன்... தாய் வீட்டில் வைத்து மனைவிக்கு நேர்ந்த கொடூரம்... அதிர்ச்சியில் செஞ்சி
`பேயாக' மாறிய கணவன்... தாய் வீட்டில் வைத்து மனைவிக்கு நேர்ந்த கொடூரம்... அதிர்ச்சியில் செஞ்சி
செஞ்சி அருகே வரதட்சனை கேட்டு மனைவியை பெல்ட்டால் தாக்கியதாக கணவன் மீது புகாரளிக்கப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த தஸ்லிமுக்கும், கடலூர் மாவட்டத்தை சேர்ந்த முகமது யாசினுக்கும் திருமணமாகி 8 ஆண்டுகள் ஆன நிலையில், ஆரம்பம் முதலே வரதட்சனை கேட்டு கணவன் குடும்பத்தார் கொடுமை செய்து வந்ததாக கூறப்படுகிறது. வழக்கம்போல் ஏற்பட்ட பிரச்சினையால், கடந்த 25-ம் தேதி மீனம்பூரில் உள்ள தாய் வீட்டிற்கு தஸ்லிம் வந்துள்ளார். இதனையடுத்து அங்கு சென்ற முகமது, தஸ்லிமை சரமாரியாக பெல்ட்டால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கணவர் முகமது மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வரதட்சனை கொடுமை செய்ததாக புகாரளிக்கப்பட்டது. ஆனால், இதுவரை போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என தஸ்லிம் தரப்பினர் வருத்தம் தெரிவித்துள்ளனர்.