பூமியை பிளந்து வந்த ராட்சத நீர்.. மிரண்டு போன வாணியம்பாடி மக்கள் | Tirupathur

x

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் ராட்சத குழாய் மூலம் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் உபரி நீர் வெளியேறி வீணாகியது.

வாணியம்பாடி நியு டவுன் பகுதியில் ஒகேனக்கல் கூட்டு நீர் வந்து செல்ல 12 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தேக்க தொட்டி அமைக்கப்பட்டு அங்கிருந்து வாணியம்பாடி சுற்றுவட்டார பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யபட்டு வருகிறது. தண்ணீர் செல்லும் பாதையில் அழுத்தம் அதிகரிக்கும் போது குழாய் வெடிக்காமல் இருக்க உபரி நீர் வெளியேறி ஏரியில் கலப்பதற்காக ராட்சத குழாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அடிக்கடி அந்த ராட்சத குழாய் மூலம் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் வெளியேறி கழிவு நீர் கால்வாயில் கலந்து வீணாக செல்கிறது. இந்த நிலையில் இரவு நேரத்தில் ராட்சத குழாய் மூலம் லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாக சென்றது. குடிநீர் வடிகால் வாரியம் இதை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்