Case-ஆக மாறிய Gas - வைரலாகும் பதுக்கல் வீடியோ
அருமனை பகுதியில் உள்ள கட்டடம் ஒன்றில், பொதுமக்களின் வீட்டு தேவைக்காக கேஸ் சிலிண்டர்களை ஒருவர் சட்டவிரோதமாக பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக புகாரளிக்கப்பட்டது. சம்பவ இடத்தில் சோதனை நடத்திய விளவங்கோடு தாசில்தார் அனிதா குமாரி, ஸ்ரீகுமார் என்பவரது வீட்டிலிருந்து 41 கேஸ் சிலிண்டர்களை பறிமுதல் செய்த நிலையில், இதன் பின்னணி குறித்து தீவிர விசாரணையும் நடத்தி வருகிறார். இந்நிலையில், மார்த்தாண்டம் அருகே பல்லன்விளை பகுதியில் உள்ள தனியார் தண்ணீர் விற்பனை நிலையத்தில், கேஸ் சிலிண்டர்கள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படும் வீடியோ வெளியாகி பரவி வரும் நிலையில், அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story