10 வருசமாக வாடகைக்கு இருந்தவர் வீட்டில் நெடுநெடுவென வளர்த்த செடி..பெயரை கேட்டதும் அலறிய வீட்டு ஓனர்

x

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் வீட்டில் கஞ்சா செடி வளர்த்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி எம்.வி.எஸ் நகரில் வாடகை வீட்டில் 10 வருடமாக வசித்து வருபவர் முருகன். கொத்தனார் வேலை செய்து வரும் இவர், வீட்டின் பின்புறத்தில் தொட்டி ஒன்றை வைத்து கஞ்சா செடி வளர்த்து வந்துள்ளார். இதுகுறித்து காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்த‌தும், அங்கு சென்று சோதனை செய்தனர். அப்போது, 10 அடி உயரத்திற்கு கஞ்சா செடி வளர்ந்து இருந்த‌தை உறுதி செய்தனர். இதையடுத்து, கஞ்சா செடியை வேரோடு பிடுங்கி அகற்றிய காவல்துறையினர், முருகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வாடகைக்கு குடியிருந்த வீட்டில் கஞ்சா செடி வளர்க்கப்பட்டிருந்த‌து அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்