பட்டப்பகலில் கூலிப்படை தலைவனை கொடூரமாக வெட்டி கொன்ற மர்ம கும்பல்... சென்னையில் பரபரப்பு

x

சென்னை பட்டினப்பாக்கத்தில், பிரபல கூலிப்படை தலைவன் சுரேஷ் என்கிற ஆற்காடு சுரேஷ், மர்மம் கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை புளியந்தோப்பை சேர்ந்த கூலிப்படை கும்பல் தலைவன் ஆற்காடு சுரேஷ் என்பவரும், அவரது நண்பர் மாதுவும், சென்னை பட்டினப்பாக்கம் லூப் சாலையில் உள்ள உணவகத்தில் உணவு வாங்கி, கடற்கரையில் அமர்ந்து சாப்பிட்டுள்ளனர். அப்போது அங்கு வந்த 5 பேர் கொண்ட கும்பல், ஆற்காடு சுரேஷ் மற்றும் அவரது நண்பர் மாதுவை சரமாரியாக வெட்டினர். இதில் ஆற்காடு சுரேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், அவரது நண்பர் மாதுவிற்கு லேசான வெட்டு காயம் ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆற்காடு சுரேஷ் மீது கொலை உட்பட 50க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்