"விநாயகர் சதுர்த்தி விழா" காவல்துறை அதிரடி உத்தரவு | Ganesh Chaturthi | TN Police

x

அதில், விநாயகர் சிலை நிறுவும் நாளில், தமிழ்நாடு முழுவதும் 72 ஆயிரத்து 741 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், விநாயகர் சிலை ஊர்வல நிகழ்ச்சி முழுவதும் வீடியோ பதிவு செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கியமான பகுதிகளில் கண்காணிப்புக்காக ட்ரோன்கள் மற்றும் மொபைல் சிசிடிவி பயன்படுத்தப்படவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. சிலை நிறுவி, பின்னர் அவற்றை நீர்நிலைகளில் கரைப்பதற்கு உயர்நீதிமன்றம் மற்றும் அரசு வழிகாட்டுதல்களை அவசியம் பின்பற்றப்பட வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அமைதியான முறையில் விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற அமைப்பாளர்களும், பொதுமக்களும் காவல்துறைக்கு ஒத்துழைப்பு வழங்க வலியுறுத்தப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்