விநாயக சதுர்த்தி - சிலைகளைக் கரைக்க வழிகாட்டுதல் வெளியீடு | Ganesh Chaturthi | Thanthitv

x

கோவையில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கான வழிகாட்டுதல் மாவட்ட நிர்வாகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப் பொருள்களால் மட்டுமே செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிலைகளின் மீது நீர் சார்ந்த, மக்கக் கூடிய, நச்சு கலப்பற்ற இயற்கை சாயங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. விநாயகர் சிலைகளை குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் தமிழ் நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைகளின்படி கரைக்க அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்