வானத்தில் பறக்கும் தலைக்கு குறி - வினோத போட்டியில் வென்ற இளைஞர்

x

வயல்வெளிகளை பாதுகாக்கும் உரிமையை பெறுவதற்காக, கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரத்தில் வினோத போட்டி நடத்தப்பட்டது. அதாவது, ஒருவர் ஆட்டின் தலையை உயரத்தில் தூக்கிப்போடுவார்... 20 அடி உயரமுள்ள ஈட்டிகளை வைத்திருக்கும் இளைஞர்கள், அந்த ஆட்டுத்தலையை ஈட்டியால் குத்தி, பிடிக்க வேண்டும்... எந்த கிராமத்தை சேர்ந்த இளைஞர் ஆட்டின் தலையை பிடிக்கிறாரோ அந்த கிராமத்துக்கே காவல் காக்கும் உரிமை வழங்கப்படும்... அதன்படி நடைபெற்ற போட்டியில், வலையார் பாளையத்தை சேர்ந்த இளைஞர் வெற்றி பெற்றார்.


Next Story

மேலும் செய்திகள்