கால்சியம் கார்பைடை பயன்படுத்தி பழங்களை பழுக்க வைக்கும் முறையை பின்பற்றக்கூடாது என எஃப்எஸ்எஸ்ஏஐ அறிவுறுத்தியுள்ளது.

x

கோடைக்காலம் துவங்கியுள்ள நிலையில் பழங்கள் அதிக அளவு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில் மாம்பழம் போன்ற பழங்களை செயற்கை முறையில் பழுக்க வைக்க கால்சியம் கார்பைடு பயன்படுத்த படுகிறது.இது அசிட்டிலீன் வாயுவை வெளியிடுகிறது. மேலும் பாஸ்பரஸ் மற்றும் ஆர்சனிக் உடலுக்கு கடுமையான தீங்கை விளைவிக்கின்றது. ஏற்கனவே இதை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில்,இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணயமான எஃப்எஸ்எஸ்ஏஐ தடை பற்றி மீண்டும் அறிவுறுத்தியுள்ளது. பழங்களை செயற்கையாக பழுக்க வைக்க எத்திலீன் வாயுவை பயன்படுத்துவது தொடர்பாக தெளிவான வழிகாட்டுதல் முறையை எஃப்எஸ்எஸ்ஏஐ வெளியிட்டுள்ளது. மேலும் இந்த வகை பழுக்க வைக்கும் முறையானது உணவு பாதுகாப்பு வாரியத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தெளிவு படுத்தியுள்ளது


Next Story

மேலும் செய்திகள்