ப்ரைட் ரைஸ் சாப்பிட்ட சிறுவர்களுக்கு நேர்ந்த கதி.. வலியில் துடிக்கும் சோகம் - விபரீதமாக மாறிய க்ரீம்

x

ப்ரைட் ரைஸ் சாப்பிட்ட சிறுவர்களுக்கு நேர்ந்த கதி.. வலியில் துடிக்கும் சோகம் - விபரீதமாக மாறிய வெள்ளை க்ரீம்.. மக்களே உஷார்

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில், துரித உணவுக்கடையில் சாப்பிட்ட சிறுவர்கள் உள்ளிட்டோருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆலங்குளம் - அம்பை சாலையில் செயல்படும் துரித உணவுக்கடையில், சிறுவர்கள் உள்ளிட்டோர் ஃப்ரைட் ரைஸ் மற்றும் நூடுல்ஸ் வாங்கி சாப்பிட்டுள்ளனர். இதையடுத்து வயிற்றுப்போக்கு மற்றும் காய்ச்சல் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தகவல் அறிந்த சுகாதாரத்துறை மற்றும் உணவுத்துறை அதிகாரிகள், கடைக்கு நேரில் சென்று ஆய்வு செய்து கடையை பூட்டினர். மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை சந்தித்து பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தனர். ஃப்ரைட் ரைஸ், சிக்கன் ரைஸ் வாங்கிய நபர்கள், முட்டையில் இருந்து தயாரிக்கப்படும் கிரீமை பயன்படுத்தியதாலேயே வயிற்று வலி மற்றும் வாந்தி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஃப்ரைட் ரைஸ் மாதிரிகளை எடுத்து ஆய்வுக்காக உணவுத்துறை அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்