அடிக்கடி தலை காட்டும் மழை...காய மறுக்கும் அரசு கோப்புகள் - திகைத்து நிற்கும் அரசு அதிகாரிகள்

x

நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த கோப்புகள் பெருவெள்ளத்தில் மூழ்கிய நிலையில், 16 நாட்கள் ஆகியும் அவற்றைக் காய வைக்க முடியாமல் அதிகாரிகள் தவித்து வருகின்றனர்.கடந்த 17 மற்றும் 18ம் தேதிகளில் நெல்லையில் பெய்த கனமழையால் தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆட்சியர் அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகம், பாளையங்கோட்டை தாலுகா அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் தண்ணீரில் மூழ்கின... வெள்ளம் வடிந்து சகஜ நிலைக்குத் திரும்பிய நிலையில், மழை வெள்ளத்தில் மூழ்கிய அரசு அலுவலக கோப்புகளை ஊழியர்கள் காய வைத்து வருகின்றனர்... ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வந்த முதன்மை கல்வி அலுவலகம் முழுவதும் தண்ணீர் மூழ்கியதால் பாளையங்கோட்டை பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் பள்ளியில் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது... முதன்மை கல்வி அலுவலரின் ஜீப் உள்ளிட்ட வாகனங்களும் நீரில் மூழ்கிய நிலையில் அதனை சர்வீஸ் செய்யும் பணிகளும் தீவிரமாக நடக்கின்றன... வெள்ளம் வடிந்து 16 நாட்கள் ஆகியும் அவ்வப்போது நெல்லை மாநகரப் பகுதிகளில் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வரும் காரணத்தால் காய வைக்கப்பட்ட ஆவணங்களும் கோப்புகளும் காயாத நிலையில் அதிகாரிகள் செய்வது அறியாத திகைத்து வருகின்றனர்...


Next Story

மேலும் செய்திகள்