"மகளிர் இலவச பஸ்களால்... சுற்றுப்புறச் சூழலுக்கு பாதிப்பு.." - பிரதமர் மோடி பரபரப்பு பேச்சு
தனியார் ஊடகம் ஒன்றிக்கு நேர்காணல் வழங்கிய பிரதமர் மோடி,
தேர்தலில் வெற்றி பெறுவதற்காக சில கட்சிகள் மகளிருக்கு இலவச பேருந்து பயணத்தை வழங்குவதாக விமர்சித்தார். இதனால் மெட்ரோ ரயில்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 50 சதவீதம் குறைந்து விடுவதாக குறிப்பிட்ட பிரதமர் மோடி, இந்த திட்டத்தால், பேருந்துகளில் அதிக நெரிசல் ஏற்படுவதோடு, சுற்றுப்புறச் சூழலும் கடுமையாக பாதிக்கப்படுகிறது என்றார். இதற்கு பதிலளித்துள்ள டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், மகளிர் இலவச பேருந்து பயண திட்டத்தை முடிவுக்கு கொண்டு வர பிரதமர் நினைப்பதாக குற்றம் சாட்டினார். நாட்டின் பிரதமரும் அமைச்சர்களும் இலவச விமான சேவையை பெறும்போது நாட்டில் உள்ள பெண்களும் இலவச பேருந்து சேவையை பெற முடியும் என கெஜ்ரிவால் கூறினார்.
Next Story