இலவசமாக மண் கேட்டு மிரட்டல் - திருவள்ளூரில் பயங்கரம்
திருவள்ளூர் மாவட்டம் வேம்பேடு பகுதியில் மணல் குவாரிக்குள் புகுந்து ஓட்டுநர்களை தாக்கி மாமூல் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். எல்லாபுரம் அதிமுக ஒன்றிய இளைஞர் பாசறை நிர்வாகியும் குவாரி உரிமையாளருமான கோதண்டன் என்பவர் அரசு அனுமதி உடன் மண் குவாரி எடுத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் மண் குவாரிக்குள் புகுந்த திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் பிரேம்குமார், இலவசமாக மண் கொடுக்க கோரி மிரட்டியுள்ளார். இந்த சம்பவம் குறித்து அளித்த புகாரின் அடிப்படையில், பிரேம்குமாரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story