இலவச தரிசனம்.. "சட்டத்தில் இடமில்லை.." - சமயபுரம் கோயிலில் வெடித்த சர்ச்சை
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் இணை ஆணையரை கண்டித்து, பொதுமக்கள், கடை உரிமையாளர்கள் கருப்பு ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். சமயபுரம் மாரியம்மன் கோயிலில் உள்ளூர் மக்கள் மற்றும் கடை உரிமையாளர்களும் கட்டணமில்லாமல் அனுமதிக்க முடியாது என கோயில் நிர்வாகம் கூறியுள்ளதாக குற்றம் சாட்டினர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய இணை ஆணையர் கல்யாணி, இலவசமாக சாமி தரிசனம் செய்ய சட்டத்தில் இடமில்லை என கூறியுள்ளார். இதனால், நீதிமன்றத்தில் உத்தரவு பெற்று வந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்றும் கூறியதால், தீர்வு கிடைக்கும் வரை கடைகளை திறக்க மாட்டோம் என கூறியுள்ளனர்.
Next Story