காவல் பணியில் இருந்த நால்வரை அடித்து இழுத்து சென்ற காட்டாறு.. நடுவே நடந்த அதிசயமும் அதிர்ச்சியும்

x

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே, காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி விவசாயி ஒருவர் உயிரிழந்தார். ஆண்டிப்பட்டி மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் நேற்று மாலை முதல் பலத்த மழை பெய்தது. ஆண்டிப்பட்டி அருகே வேலப்பர் கோவில் மலைப்பகுதியில் உள்ள கூட்டாற்று ஓடையில், காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. அப்போது, தோட்டத்தில் இரவு காவல் பணிக்கு சென்ற தெப்பம்பட்டியை சேர்ந்த முருகன் மற்றும் 3 பேர் அடித்துச் செல்லப்பட்டனர். இதில் முருகனை தவிர மற்ற மூவரும் மரக்கிளைகளை பிடித்து தப்பித்து கரை சேர்ந்தனர். 4 மணி நேர தேடுதலுக்குப்பின், முருகனின் உடலை தீயணைப்புத்துறையினர் மீட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்