விரக்தியின் உச்சிக்கே சென்ற விவசாயி.. மனமுடைந்து டிராக்டரை எடுத்து செய்த செயல் - கல் மனதையும் கரையவிடும் காட்சி

x

கடும் வறட்சி மற்றும் அதிக வெப்பத்தால் பாதிக்கப்பட்ட பாரம்பரிய நெற்பயிர்களை டிராக்டர் விட்டு விவசாயி அழித்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது... நாகை மாறாச்சேரியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் வேணு காளிதாஸ் பல ஆண்டுகளாக இயற்கையான முறையில் பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்து வருகிறார். இந்த ஆண்டு அதீத வெப்பம், வறட்சியால் 5 ஏக்கரில் பயிரிட்ட கருப்புக் கவுனி பதராக மாறிய நிலையில், மனமுடைந்த விவசாயி வேணு காளிதாஸ் டிராக்டரை விட்டு வயலில் பயிர்களை அழித்துள்ளார்... அரசு உரிய இழப்பீடு வழங்காவிட்டால் தன்னைப் போன்ற விவசாயிகள் பாரம்பரிய நெல் ரகங்களைப் பயிரிடுவதே கேள்விக்கிறியாகி விடும் என அவர் கவலை தெரிவித்தார்...


Next Story

மேலும் செய்திகள்