அதிகரிக்கும் மோதல் - தமிழ்நாடு வனத்துறை - முக்கிய அறிவிப்பு

x

தமிழ்நாடு வனத்துறையால், யானைகள் வழித்தடத் ஒருங்கிணைப்புத் திட்டத்திற்கான வரைவு தயாரிக்கப்பட்டு வனத்துறையின் இணைய தளத்தில் பொதுமக்களின் தகவலுக்கும், யானை ஆய்வாளர்களின் ஆலோசனைகள் பெறுவதற்கும் பதிவேற்றம் செய்யப்பட்டது. அந்த வரைவின் மீது பெறப்பட்ட கருத்துக்கள் தற்போது மாவட்ட வாரியாக தொகுக்கப்பட்டு வருகின்றன. இத்திட்டம் தொகுக்கப்பட்ட பின்னர், யானை இருப்பிட பகுதியில் ஒவ்வொரு மாவட்டத்திலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொது மக்கள் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்பட்டு பொதுமக்களின் கருத்துக்கள், ஆலோசனைகள் பதிவு செய்யப்படும். அக்கூட்டத்தில் யானைகளின் துண்டுபட்ட வாழிடங்களை இணைப்பதற்கான வழிமுறைகள் பொதுமக்களின் ஒத்துழைப்போடு தொகுக்கப்படும்.

அடையாளம் காணப்பட்ட ஒவ்வொரு வழித்தடத்திற்கும் தொகுக்கப்பட்ட திட்டத்தின் அடிப்படையில், இறுதி யானை வழித்தட ஒருங்கிணைப்பு திட்டம் தயாரிக்கப்படும். பின்னர் அவ்வாறு தொகுக்கப்பட்ட இறுதி ஆவணம் மாநில அரசின் பரிசீலனைக்கு சமர்ப்பிக்கப்படும். இறுதி ஆவணத்தில் மனித மற்றும் வன உயிரின மோதல்களை தவிர்க்கவும், உள்ளூர் மக்களின் பாதுகாப்பை உறுதிபடுத்த சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளும் திட்டமிடப்படும். அந்த இறுதி ஆவணமே மாநில அரசால் பரிசீலிக்கப்பட்டு அறிவிக்கை செய்யப்படும். எனவே யானைகள் வழித்தடத் ஒருங்கிணைப்புத் திட்ட வரைவு குறித்த தவறான தகவல்களை நம்ப வேண்டாம் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்