மதுரை மீனாட்சி அம்மனை காண வந்தோருக்கு - பள்ளிவசால் முன் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்
#thanthitv #madurai #muslim #hindu #unity
மதுரை மீனாட்சி அம்மனை காண வந்தோருக்கு - பள்ளிவசால் முன் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்
மதுரையில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு, அப்பகுதியில் உள்ள பள்ளி வாசல் சார்பில் ரோஸ்மில்க் வழங்கப்பட்டு வருவது, நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையில் சித்திரை திருவிழா விமரிசையாக நடைபெற்று வருகிறது. நாள்தோறும் மீனாட்சி அம்மன் கோயிலில் இருந்து அய்யனும், அம்பாளும் தெற்குவாசலை அடுத்த பாவக்காய் மண்டபத்திற்கு வந்து, பின்னர் கோயிலை அடைவதும், அப்போது சாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் கூடுவதும் வழக்கம். இந்நிலையில், பக்தர்களுக்கு அப்பகுதியில் உள்ள முகைதீன் ஆண்டவர் பள்ளி வாசல் சார்பில், ரோஸ்மில்க் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. இது, மதுரையின் மதநல்லிணக்கத்துக்கு சான்றாக அமைந்துள்ளது.
Next Story