பிரபல தொழிலதிபருக்கு ஸ்கெட்ச்..அடுத்த நொடியே பயங்கரம்..அப்படியே காட்டிகொடுத்த கூகுள் லென்ஸ் |Chennai

x

இலங்கையைச் சேர்ந்த தொழிலதிபர் முகமது ஷியாம் என்பவர், கடந்த 10-ஆம் தேதி சென்னை வந்துள்ளார். இவர் மண்ணடி பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த நிலையில், இவரை ஒரு கும்பல் கடத்தி 15 லட்ச ரூபாய் பணம் கேட்டு வீடியோ காலில், அவரது மகளுக்கு மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து போலீசாரிடம் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், கடத்தல்காரர்களின் இருப்பிடத்தை கூகுள் லென்ஸ் மூலம் அறிந்த போலீசார், கடத்தலில் ஈடுபட்ட இலங்கையை சேர்ந்த முகமது ரியாஸ், அண்ணா நகரை சேர்ந்த சித்ரா, தினேஷ் மற்றும் வேலு ஆகியோரை கைது செய்தனர். இந்நிலையில், போலீசாரின் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன. அதன்படி, முகமது ஷியாம் தமிழகத்திற்கு கப்பல் மூலம் அனுப்பிய பீடி இலை உள்ளிட்ட பொருள்கள், சுங்கத்துறை அதிகாரிகளால் நிறுத்தப்பட்டுள்ளன. இதனை வெளியே கொண்டு வர பணம் தேவைப்பட்டதால், அண்ணா நகரில் வசித்து வந்த முகமது ரியாஸை காண, முகமது ஷியாம் சென்னை வந்துள்ளார். அப்போது, அவர் ரியாசிடம் பணம் வாங்க சென்ற நிலையில், அங்கிருந்த சித்ரா என்ற பெண்ணிடம் முகமது ஷியாம் ஏற்கனவே தொழில் ரீதியாக 5 லட்ச ரூபாய் பணம் வாங்கி அதனை திருப்பி கொடுக்காமல் இருந்தது தெரிய வந்தது. இதனால், அக்கும்பல் முகமது ஷியாமை கடத்தி பணம் கேட்டு மிரட்டியதை போலீசார் கண்டறிந்தனர். மேலும், கைது செய்யப்பட்டவர்களில் தினேஷ் என்பவர் அதிமுக வட்டச் செயலாளர் காசி என்பவரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவத்தில் தொடர்புடைய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்