குழந்தைகள்.. பெரியவர்கள் என அனைவரும் ருசிக்கும் உணவில் கேன்சர்? - தமிழகம் முழுவதும் பறக்கும் ரெய்டு
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை
அனைவரும் ருசிக்கும் உணவில் கேன்சர்?
யாருமே எதிர்பார்க்காத அதிர்ச்சி உண்மை
தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் பானிபூரி கடைகளில் அதிரடி சோதனை செய்யப்பட்டு வரும் நிலையில் ஈரோட்டில் அதிகாரிகள் சோதனை செய்த போது தரமற்ற உணவுப் பொருள்கள் கைப்பற்றப்பட்ட சம்பவம் பானிபூரி பிரியர்களை பீதியில் உறையச் செய்துள்ளது...
பானிபூரி சாப்பிட்டால் கேன்சர் வருமா? என்பது தான் கடந்த சில நாள்களாக தமிழகம் முழுவதும் உணவுப் பிரியர்களைத் துளைத்தெடுத்து வரும் கேள்வி...
கர்நாடகாவில் பானிபூரியில் கேன்சர் வரவழைக்கும் செயற்கை நிறமிகள் கலப்பதாக எழுந்த புகாரின் பேசில் தமிழகத்திலும் அதிகாரிகள் சோதனையைத் தீவிரப்படுத்தினர்...
அந்த வகையில் ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி தங்க விக்னேஷ் தலைமையில் அதிகாரிகள் குழு பானிபூரி தயாரிக்கும் கடைகளில் அதிரடி சோதனை நடத்தியது...
பழனிமலை வீதியில் உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சோட்டு என்பவர் பானிபூரி தயாரிக்கும் கடையை ஆய்வு செய்த போது அதிகாரிகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது...
சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்பட்ட பானிபூரிகள்...முளைத்த உருளைக் கிழங்குகள் அடங்கிய 50 கிலோ எடை கொண்ட மூட்டை...அனுமதி பெறப்படாத செயற்கை நிறமிகள்...சிட்ரிக் அமில பாக்கெட்...என உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் அத்தனையும் ஒரே இடத்தில் இருந்தன...
தொடர்ந்து பரிசோதனைக்காக பானிபூரி மாதிரி எடுத்துச் செல்லப்பட்டது...
ஆய்வின் முடிவில் வரும் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த அதிகாரிகள், பானிபூரி வியாபாரிகளுக்கு சுகாதாரமான முறையில் தயாரிப்பது குறித்து வகுப்பெடுக்கப்படும் என தெரிவித்தனர்...
குழந்தைகள்,பள்ளி கல்லூரி மாணவர்கள்,இளைஞர்கள்,பெரியவர்கள் என அனைத்துத் தரப்பினரும் விரும்பி வாங்கி உண்ணும் பானிபூரியை மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு சுகாதாரமான முறையில் தயாரிக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது,...