வைகையில் பெருக்கெடுத்த வெள்ளம் -5 மாவட்டங்களுக்கு பறந்த எச்சரிக்கை - மீண்டும் பதற்றத்தில் தென்னகம்..

x

வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், வைகை அணைக்கான நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன்காரணமாக, வைகை அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு, 2 ஆயிரத்து 900 கன அடியில் இருந்து 5 ஆயிரத்து 500 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருப்பதால் அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு, நள்ளிரவில் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறும் பொதுப்பணித்துறை அதிகாரிகள், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட கரையோர மக்களுக்கு, மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்