வெள்ளத்தால் மிதந்த வீடுகள்... குடியிருப்பை விட்டு வெளியேறும் அவலம் - மாநகராட்சி எடுத்த நடவடிக்கை

x

சிவகாசியில் பெய்த தொடர் மழை காரணமாக சிறுகுளம், கண்மாய் மற்றும் அதன் நீர் வரத்து கால்வாய் முழுவதும் நிரம்பி கண்மாய்க்கு அருகில் உள்ள சிறுகுளம் காலனிக்குள் மழை நீர் புகுந்தது. இதனால் அப்பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் வெள்ளத்தில் மிதந்தன... குளம் போல் தேங்கிய நீரால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.. சிலர் உடைமைகளை எடுத்துக் கொண்டு வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர்... தண்ணீரை வெளியேற்றும் பணியிலும், மக்களை நிவாரண முகாம்களில் தங்க வைக்கவும் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது


Next Story

மேலும் செய்திகள்