வெள்ள நிவாரணம்.. நெல்லை மாவட்ட மக்களுக்கு வெளியான அறிவிப்பு | Tirunelveli | Flood |
நெல்லையில் மழை வெள்ள நிவாரணம் வழங்கும் பணிகள் தொடங்கப்பட்ட நிலையில், ஒரேநாளில் ஒரு லட்சத்து 35 ஆயிரம் பேருக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் ஏற்பட்ட கனமழை வெள்ளத்தால் அதிகம் பாதித்த இடங்களுக்கு 6 ஆயிரம் ரூபாயும், குறைந்த பாதிப்புள்ள இடங்களுக்கு ஆயிரம் ரூபாயும் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டு 220 கோடியே 76 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கி, நிவாரணத்தொகை வழங்கும் பணிகள் நேற்று தொடங்கியது. முதல் நாளில் மட்டும் ரேஷன் கடைகள் மூலம், ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 39 பேருக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாக நெல்லை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. நிவாரணத் தொகை பெற தகுதியான குடும்ப அட்டைதாரர்களில் 26.77 சதவீத குடும்பத்தினர்கள், நிவாரணத் தொகையை பெற்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தொடர்ந்து ஜனவரி 3ஆம் தேதி வரை நிவாரணத் தொகை வழங்கப்பட உள்ளதாகவும் நெல்லை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது