இந்த தேதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்... வார்னிங் கொடுத்த வானிலை ஆய்வு மையம்

இந்த தேதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்... வார்னிங் கொடுத்த வானிலை ஆய்வு மையம்

இந்த தேதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்...

வார்னிங் கொடுத்த வானிலை ஆய்வு மையம்

வரும் 24ம் தேதி வரை வங்கக் கடல் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது...

வரும் 22ஆம் தேதி தென்மேற்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இது முதலில் வடகிழக்கு திசையில் நகர்ந்து மே 24 ஆம் தேதி காலை மத்திய வங்கக்டலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது... இதனால் மே 24 மற்றும் 25 ஆம் தேதிகளில் வடக்கு ஒடிசா மற்றும் கங்கை நதி - மேற்கு வங்கத்தில் ஒரு சில இடங்களில் அதி கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது... மே 23 மத்திய வங்கக் கடலிலும், மே 24ல் வடக்கு வங்க கடலிலும் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும்... இதனால் மீனவர்கள் இரு தினங்களும் கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் கடலுக்குச் சென்ற மீனவர்கள் மே 23ஆம் தேதிக்குள் கரைக்குத் திரும்ப எச்சரிக்கப்பட்டுள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்