தடைக்கலாம் முடிந்ததும்...- கிடுகிடுவென உயர்ந்த விலை
ராமேஸ்வரம் மீனவர்கள் 600க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். போதிய அளவில் மீன் வரத்து கிடைத்தாலும் நண்டு, இறால், கணவாய் உள்ளிட்ட மீன்களுக்கு போதிய விலை கிடைக்காததாலும், மீன்களை வாங்க அதிக அளவில் வியாபாரிகள் வராததால் மீன்களின் விலை வீழ்ச்சி அடைந்ததாக மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்... தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து மீனவர்கள் பிடித்து வரும் மீன்களுக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டுமென வலியுறுத்தினர்...
கடலூரில் மிக மிகக் குறைந்த அளவிலேயே படகுகள் கரைக்கு திரும்பின. மீன்கள் வரத்து குறைவாக காணப்பட்டது. இதனால் மீன்கள் விலையும் அதிகரித்தது. ஒரு கிலோ வஞ்சிரம் மீன் ஆயிரத்து 300 ரூபாய்க்கும், 200 ரூபாய் முதல் 300 ரூபாய்க்கு விற்கப்படும் சங்கரா மீன் 500 ரூபாய்க்கும், இறால் வகைகள் 300 முதல் 400 ரூபாய் வரைக்கும், 100 முதல் 200 ரூபாய் வரைக்கும் விற்கப்படும் கனவாய் வகை மீன்கள் 300 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டன. மீன்பிடித் தடைக்காலத்தில் மீன்கள் விலை உயர்ந்து காணப்பட்ட நிலையில் தடைக்காலம் முடிந்து மின்விளை குறையும் என எதிர்பார்த்து வந்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.