இரவை கிழித்து மின்னல் வேகத்தில் பயந்த தீ பந்துகள் - உயிரோடு விளையாடும் மக்கள்
இரவை கிழித்து மின்னல் வேகத்தில் பயந்த தீ பந்துகள் - உயிரோடு விளையாடும் மக்கள்
மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் தீபாவளியை ஒட்டி நடைபெற்ற தீப்பந்து எறியும் பாரம்பரிய திருவிழாவில் 17 பேர் காயமடைந்தனர். வனப் பகுதியில் கிடைக்கும் ஹிங்காட் எனப்படும் பழத்தை சேகரித்து, அதன் உள்ளே வெடிமருந்தை நிரப்பி, 10 நாட்கள் காயவைத்து, தீப்பந்துகளாக பயன்படுத்துகின்றனர். அந்த தீப்பந்துகளை பற்ற வைத்து, இரு குழுக்களாக பிரிந்து ஒருவர் மீது ஒருவர் வீசும் பாரம்பரியத் திருவிழா, நேற்று நடைபெற்றது. இதில், 17 பேர் லேசான காயம் அடைந்தனர். அவர்களுக்கு மருத்துவக் குழுவினர் முதலுதவி அளித்து, வீட்டுக்கு அனுப்பி வைத்ததாக வட்டார மருத்துவ அலுவலர் தெரிவித்தார்.
Next Story