ஸ்விட்ச்சை போட்டதும் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறிய டிவி.. நொடியில் கருகிய வீடு

x

தூத்துக்குடி அருகே டிவி வெடித்து ஏற்பட்ட தீவிபத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போல்பேட்டை கிழக்கு பகுதியில் செண்பகவல்லி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில், வீட்டில் தனியாக இருந்த அவரது மகள், டிவியை போட்டுள்ளார். அப்போது, பயங்கர சத்தத்துடன டிவி வெடித்து சிதறி தீப்பிடித்துள்ளது. இதில், வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் தீயில் கருகிய நிலையில், விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை போராடி அணைத்தனர்.

முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்