தி.மலையில் ஏற்பட்ட தீ விபத்து..போராடி அணைத்த தீயணைப்புத் துறை..
திருவண்ணாமலையில், அண்ணாமலையார் கோவிலின் பின்புறம்2 ஆயிரத்து 668 அடி உயரத்தில் அண்ணாமலையார் மலை அமைந்துள்ளது. மாவட்ட நிர்வாகம், வனத்துறையுடன் இணைந்து மேற்கொண்ட கூட்டு நடவடிக்கைகளால், 5 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த பகுதியில் தீ விபத்து தவிர்க்கப்பட்டது. இந்நிலையில், கடந்த மாதமும் இந்த மாதமும் மலை மீது தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை மாலையில் அண்ணாமலையார் மலை மீது தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீயை வனத்துறையினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயினை அணைத்தனர். இந்த விபத்தில் மலையில் உள்ள மூலிகை மரங்கள் மற்றும் பசுமை மரங்கள் எரிந்து சேதம் அடைந்தது.
Next Story