உடலுறுப்பு தானம் செய்த பெண் ஊழியர்.. ஊராட்சி மன்றம் செய்த நெகிழ்ச்சி சம்பவம்
சென்னை ஆவடியை அடுத்த அயப்பாக்கத்தில், உடலுறுப்பு தானம் செய்த ஓய்வு பெற்ற பெண் ஊழியரின் பெயரை, அவர் வாழ்ந்த தெருவிற்கு சூட்டி மாவட்ட நிர்வாகம் கௌரவித்துள்ளது. சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற பானுமதி அம்மாள், 67-ஆவது வயதில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவருடைய ஆசைப்படி உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட பின், அவருடைய உடலுக்கு தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. இதற்கிடையே, அயப்பாக்கம் ஊராட்சி நிர்வாகம் சார்பில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, பானுமதி அம்மா வாழ்ந்த தெருவிற்கு அவருடைய சூட்டி பெயர்ப் பலகை வைக்கப்பட்டுள்ளது.
Next Story