நேரில் வந்த பெலிக்ஸ்.. நீதிபதி அதிரடி உத்தரவு

x

ரெட்பிக்ஸ் ஆசிரியர் பெலிக்ஸ் ஜெரால்டுக்கு, ஒரு நாள் போலீஸ் காவலில் விசாரிக்க, நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. பெலிக்ஸ் ஜெரால்டுவின் பிணை மனு, திருச்சி கூடுதல் மகிளா நீதிமன்ற நீதிபதி ஜெயப்பிரதா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அவர் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது போலீசார் தரப்பில் ஏழு நாள் கஸ்டடி கோரி மனு வழங்கப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி, ஒரு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கினார். மீண்டும் இன்று மாலை 3 மணி அளவில் அவரை நேரில் ஆஜர் படுத்த உத்தரவிட்டார். அதோடு ஜாமின் மனுவை நாளைக்கு ஒத்தி வைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்