அரசு வழக்கறிஞர்களுக்கான கட்டணம் - தமிழக அரசு சொன்ன முக்கிய தகவல்

x

அரசு வழக்கறிஞர்களுக்கான கட்டண கோரிக்கைகளை பெற்று முடிவெடுக்க தனி இணையதளம் துவங்கப்பட்டுள்ளதாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.

தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞராக, 2006 முதல் 2011-ம் ஆண்டு வரை பணியாற்றிய எஸ்.ராமசாமிக்கு வழங்க வேண்டிய, ஒரு கோடியே 95 லட்சம் ரூபாய் கட்டணம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில், சிறப்பு அதிகாரியை நியமிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார் மற்றும் கே.குமரேஷ்பாபு அமர்வு முன் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு வழக்கறிஞர்களுக்கான கட்டணங்களை வழங்குவதற்காக சிறப்பு செயலாளராக, பொதுத்துறையை செயலாளரை நியமித்துள்ளதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஒவ்வொரு துறையிலும் துணைச் செயலாளர் அந்தஸ்து அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், கட்டணங்களை வழங்க இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. இந்த நடைமுறையை அடுத்த 3 மாதங்களுக்கு செயல்படுத்தலாம் என தெரிவித்த நீதிபதிகள், விசாரணையை டிசம்பர் 20-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்