நோயால் உயிரிழிந்த அப்பா.. சோகத்தில் பாலத்தில் இருந்து குதித்த மகன் பலி
திருச்சி மாநகரம் ஆழ்வார்தோப்பு பகுதியை சேர்ந்த முஹம்மது ரியாஸ் என்பவரின் தந்தையான அல்லாஹ் பிச்சை என்பவர், உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். தந்தையின் மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்த மகன் ரியாஸ் தந்தை உயிரிழந்த துக்கம் தாங்காமல், மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள
மேம்பாலத்திலிருந்து திடீரென கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக அங்கிருந்தவர்கள் ரியாசை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எனினும் அங்கு சிகிச்சைப் பலனின்றி ரியாஸ் உயிரிழந்தார். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளதுhttps://youtu.be/Wyzie_aIdFE
Next Story