32 நாட்கள் தொடர் உண்ணாவிரதம்..ராஜீவ் கொலை வழக்கு கைதி முருகன் உடல்நலம் கடும் பாதிப்பு

x

32 நாட்கள் தொடர் உண்ணாவிரதம்..ராஜீவ் கொலை வழக்கு கைதி முருகன் உடல்நலம் கடும் பாதிப்பு

வேலூர் சிறையில் தொடர் உண்ணாவிரதம் இருந்து வரும், ராஜீவ் கொலை வழக்கு கைதி முருகனுக்கு சிகிச்சை அளித்து காப்பாற்ற கோரி, அவரது

உறவினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அவரது மாமியாரும், நளினியின் தாயாருமான பத்மா தாக்கல் செய்த அந்த

மனுவில், தொடர் உண்ணாவிரதம் இருந்து வரும் முருகன் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். கடந்த 32 நாட்களுக்கு மேல்

உண்ணாவிரதம் இருந்து வரும் முருகனின் உடல் எடை குறைந்து தற்போது ஆபத்தான நிலையில் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அவருக்கு உரிய சிகிச்சை

வழங்கி, அவரது உயிரை காப்பாற்ற வேண்டும் என்று சிறைத்துறை அதிகாரி மற்றும் தமிழக தலைமைச் செயலாளர்களுக்கு மனு அளித்தும் நடவடிக்கை

எடுக்கவில்லை எனவும் குற்றம்சாட்டியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது


Next Story

மேலும் செய்திகள்