விவசாயிகள் மொட்டை அடித்து ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம்

x

திருப்பூரில், விவசாய நிலங்களை கையகப்படுத்தும் அறநிலையத்துறையை கண்டித்து, விவசாயிகள் மொட்டை அடித்து ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இணாம் விவசாயிகள், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தை சேர்ந்த விவசாயிகள், தங்கள் உடமைகளுடன் தொடர் பு முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாய நிலத்தை கையப்படுத்தும் நடவடிக்கையை கைவிடாவிட்டால், தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் தெரிவித்தனர். போராட்டத்தில் ஒரு பகுதியாக ஆண்கள் மொட்டை அடித்தும், பெண்கள் ஒப்பாரி வைத்தும் எதிர்ப்பை தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்