சம்பந்தமே இல்லாமல் வந்த கார்.. திறந்து பார்த்ததும் பளபளவென மின்னிய காந்தி தாத்தா

x

தேனி மாவட்டம் கருவேல் நாயக்கன்பட்டியில், போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் வந்த கார் ஒன்றை பிடித்து விசாரணை நடத்தியதில் இருவரும் சிக்கி இருக்கின்றனர். காருக்குள் 2 ஆயிரம் ரூபாய் மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் கலர் ஜெராக்ஸ் அடிக்கப்பட்டு அட்டைப் பெட்டியில் இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். விசாரணையில், இருவரும் தேனியை சேர்ந்த கேசவன் மற்றும் சேகர்பாபு என்பது தெரியவந்தது. இருவரையும் அவர்களது வீட்டிற்கு அழைத்துச் சென்று சோதனை நடத்திய போலீசார், வீட்டிற்குள் இருந்து சுமார் 3 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான கலர் ஜெராக்ஸ் நோட்டுகளையும், 15 லட்சம் ரூபாய் கள்ள நோட்டுகளையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து இருவரது வீட்டிலும் இருந்து 3 சொகுசு கார் மற்றும் 20 செல்போன்களை பறிமுதல் செய்த போலீசார், இருவரும் இரட்டிப்பு பண மோசடியில் ஈடுபட்டு வந்ததை கண்டுபிடித்தனர். ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தால் 2 லட்சம் ரூபாய் தருவதாக கூறி கலர் ஜெராக்ஸ் நோட்டுகளை காண்பித்து இருவரும் மோசடியில் ஈடுபட்டு வந்தது தெரியவர, போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்