போலி சான்றிதழ்.. சிக்கிய 3 பெண் பயிற்சி காவலர்கள்
போலி ஆவணங்களைக் காட்டி ராணிப்பேட்டை மாவட்டம் தக்கோலத்தில் உள்ள மத்திய தொழிற் பாதுகாப்பு படை மையத்தில் சேர முயன்ற 3 பேர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது... கடந்த டிசம்பர் 15ம் தேதியிலிருந்து அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த ஜெபாபிரவீன் , லக்கி யாதவ், சுகினி யாதவ் ஆகியோர் காவலர்களாக பயிற்சி பெற்று வந்த நிலையில், இவர்களது அனைத்து சான்றிதழ்களும் உண்மைத் தன்மைக்காக அசாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு மேற்கண்ட 3 பெண் பயிற்சி காவலர்களும் கொடுத்த இருப்பிட சான்றிதழ் போலியானது என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து தக்கோலம் பயிற்சி மைய காவல் ஆய்வாளர் சிவபத்மா தக்கோலம் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story