பேஸ்புக் விளம்பரத்தை பார்த்து ரூ.1.7 கோடியை கொட்டிய சென்னை ஐடி ஊழியர் -அடுத்து காத்திருந்த அதிர்ச்சி

x

ஆன்லைன் முதலீடு செய்தால் நல்ல லாபம் பெறலாம் என்று ஃபேஸ்புக் மூலம் விளம்பரம் செய்து ஏமாற்றும் கும்பலை, சென்னை போலீசார் கைது செய்துள்ளனர்.

இது தொடர்பாக சென்னை மணப்பாக்கத்தை சேர்ந்த ஐடி நிறுவன ஊழியர் ஒருவர், காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். அதில், ஃபேஸ்புக் பக்கத்தில் ஆன்லைன் முதலீடு விளம்பரத்தை பார்த்து தொடர்பு கொண்டபோது, இரட்டிப்பு லாபம் எனக்கூறியதாகவும், அதை நம்பி கடன் வாங்கி ஒரு கோடியே 70 லட்சம் வரை சிறிது சிறிதாக செலுத்தியதாகவும் கூறியுள்ளார். ஆனால், அவர்கள் மோசடி செய்துவிட்டதாக கூறியுள்ளார். இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார், திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பகுதியை சேர்ந்த குணசீலன், இளைய குமார் ஆகிய 2 பேரை கைது செய்தனர். இவர்கள், வடமாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்து தொடர்பு கொள்ளும் நபர்களுக்கு போலி ஆவணங்களை வைத்து, நிறுவனங்கள் பெயரில் வங்கி கணக்கை துவக்கி கொடுப்பவர்கள் என தெரிய வந்துள்ளது. அவர்கள் வீட்டில் இருந்து 15 லட்சம் ரூபாய் பணம், செல்போன்கள், காசோலைகள் உட்பட ஏராளமான பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் முக்கிய குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்