"சாதி உணர்வால் கற்றவர் தகுதியை அடைய முடியாது" - முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வேதனை..
மாணவர்களிடையே சாதி உணர்வும், சாதிப் பகையும் வளர்ந்து வருவது வேதனையும் அவமானமும் அளிப்பதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், தந்தை பெரியாரும், காமராஜரும், அண்ணாவும் வாழ்ந்த தமிழ்நாட்டில் இந்த நிலையா? என தெரிவித்துள்ளார். பள்ளி, கல்லூரிகளில் எந்தப் பண்புகளைக் கற்பிக்கிறார்கள் என்ற கேள்வி எழுவதாகவும், சாதி உணர்வு, சாதிப் பகையை கொண்டுள்ள மாணவர் "கற்றவர்" என்ற தகுதியை அடைய முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார். சக மாணவரை "பிற" சாதி என்று பகை காட்டும் மாணவர்கள் இருக்கும்போது, "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்று பெருமைப்படுவது கேலிக்கூத்து என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
Next Story