முன்னாள் அமைச்சர் சொத்து குவிப்பு வழக்கு - உயர்நீதிமன்றம் அதிரடி

x

சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதற்கு எதிராக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கில், அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதி, டிசம்பர் 4-ஆம் தேதி வாதங்களை தொடங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2001 முதல் 2006 வரையிலான அதிமுக ஆட்சி காலத்தில், சமூக நலத்துறை அமைச்சராக இருந்த வளர்மதி, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் இருந்து வளர்மதி மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்து ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் கடந்த 2012-ஆம் ஆண்டு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யும் வகையில், சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது. இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாக வளர்மதி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, வழக்கின் விசாரணையை டிசம்பர் 4-ஆம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, அன்றைய தினம் வழக்கில் வாதங்களை தொடங்க வேண்டுமென வளர்மதி தரப்புக்கு உத்தரவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்