மத்திய அமைச்சர்கள் பங்கேற்ற நிகழ்ச்சி - திடீரென சரிந்த LED திரை-அலறி ஓடி மக்கள்

x

மத்திய அரசின் சாகர் பரிக்ரம் திட்டத்தின் கீழ் மீனவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி தூத்துக்குடி விசைப்படகு மீன்பிடி துறைமுகத்தில் நடைபெற்றது... இதில், மத்திய மீன்வளத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா, இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்... நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்த போது, பார்வையாளர்கள் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த எல்இடி திரை திடீரென சரிந்து விழுந்தது... இதில், மத்திய அரசு தொலைக்காட்சி நிறுவன ஊழியருக்கு கையில் காயம் ஏற்பட்டது... பெரும் அசம்பாவிதம் நிகழாத நிலையில், இதனால் அங்கு சலசலப்பு நிலவியது...


Next Story

மேலும் செய்திகள்